கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-2019-ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் கீர்த்திபிரியதர்ஷினி வரவேற்றார். அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சர்க்கரை ஆலையின் கரும்பு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலையில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தையும் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்த சர்க்கரை ஆலையில் 2018-2019-ம் ஆண்டின் அரவை பருவத்திற்கு 7686.80 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக கரும்பு பயிரிடும் பரப்பு மற்றும் விளைச்சல் குறைந்துள்ளதால் 2 லட்சத்து 20 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கரும்பு அரவை பணியை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, அமரவேல், அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கோவிந்தசாமி, பொன்னுவேல், சின்னதுரை, ஆறுமுகம், மதிவாணன், செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர்கள் ராஜேந்திரன், விஸ்வநாதன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அரூர் பகுதியில் கிராமபுறங்களுக்கு இயக்கப்படும் நகர பஸ்களின் வழித்தடங்களை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நகர பஸ்களின் வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா அரூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய வழித்தடங் களில் பஸ்களை தொடங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் மலர்விழி, போக்குவரத்து கழக பொது மேலாளர் லாரன்ஸ், துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபால், அரவிந்தன், கிளை மேலாளர் வித்யானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story