வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரத்து 100 ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பொன்னேரி அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 42). நேற்று இவரது வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரத்து 100 ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story