பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்,

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பாதிக்கப்பட்டது. இதை யடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அன்னவாசல் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். அசோகன், சண்முகம், ரெங்கசாமி, ஜோஷி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் போதிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாய கடன்கள் அனைத்தையும் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மா, பலா, தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் சுய உதவிக்குழு உள்ளிட்ட வங்கி கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். வாழை ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் 6 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இதில் ரகுபதி, தேவராஜன், சோலையான், சோமையா, பாலாமணி கருப்பையா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story