மாவட்ட செய்திகள்

தடையை மீறி போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேர் கைது + "||" + Struggle Against Abolition: People Authority arrested 33 people

தடையை மீறி போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேர் கைது

தடையை மீறி போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேர் கைது
திருச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,

‘கஜா’ புயலால் பேரழிவை சந்தித்த நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கும் வரை, சேதமடைந்த வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். புயலால் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.


சேதமடைந்த மீனவர்களின் படகுகள் மற்றும் உடமைகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழு கடன், மாணவர்களின் கல்விக்கடன், விவசாயக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கி கடன்களையும் முழுமையாக ரத்து செய்திட வேண்டும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால், இந்த போராட்டத்துக்கு திருச்சி மாநகர போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே, போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே திரண்டனர். அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பின்னர் ராமகிருஷ்ணா பாலத்தில் இருந்து மரக்கடை திடல் வரை மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை, மக்கள் கலை இலக்கிய கழக செயலாளர் ஜீவா மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் சக்தி, விசு உள்பட பலர் ஊர்வலமாக வந்தனர். அவர்களை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அதையும் மீறி திட்டமிட்டபடி கோஷம் எழுப்பியபடி அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புயல் பாதித்த 4 மாவட்டங்களையும் தேசிய பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அரசு தோற்றுப்போனது என்றும் ஆவேசமாக கோஷம் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேரை திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.

கைதான அனைவரும் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்
கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
2. விருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
3. கடம்பூரில் பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை அகற்ற முடிவு இடமாற்றம் செய்யும் இடத்திலும் இரவில் போராட்டம்
கடம்பூரில் பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அங்கிருந்து கடையை இடமாற்றம் செய்ய உள்ள இடத்திலும் பொதுமக்கள் இரவில் போராட்டம் நடத்தினார்கள்.
4. தானேயில் ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகன் மீட்பு
ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. 7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி அரசு சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி அரசு சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கினர். இதனால் வகுப்புகள் நடைபெறவில்லை.