பாம்பனில் புதிதாக ரெயில் பாலம் கட்ட முடிவு; கோட்ட மேலாளர் பேட்டி


பாம்பனில் புதிதாக ரெயில் பாலம் கட்ட முடிவு; கோட்ட மேலாளர் பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2018 4:45 AM IST (Updated: 14 Dec 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் புதிதாக ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் கடந்த 4–ந் தேதி அன்று சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டாலும் தூக்குப்பாலம் முழுமையாக சீரமைத்து பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் செல்வது நிறுத்தப்பட்டதுடன் மண்டபம் ரெயில் நிலையம் வரை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாம்பன் ரெயில் தூக்கப் பாலத்தில் நடந்து வரும் பராமரிப்பு பணியை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் நீனுஇட்டியேரா நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்விற்குபின் ரெயில்வே கோட்ட மேலாளர் நீனுஇட்டியேரா நிருபர்களிடம் கூறியதாவது:– பாம்பன் ரெயில் பாலம் 100 ஆண்டுகளை கடந்த மிகவும் பழமையான பாலமாகும்.பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டு விட்டாலும் தற்போது தூக்குப் பாலத்தில் முழுமையாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகள் எத்தனை நாளில் முடிவடையும் என்பதை உறுதியாக எதுவும் தற்போது கூற முடியாது.

பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியல் உள்ள தூக்குப்பாலத்தை அகற்றி புதிய தூக்கப்பாலம் கட்டமுடிவு செய்திருந்தோம். அதேநேரம் ரெயில்பாலம் 100 ஆண்டுகளை கடந்த விட்டதால் ஒட்டுமொத்தமாக புதிதாக ரெயில் பாலம் கட்ட ரெயில்வே துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுஉள்ளது.

பாம்பனில் புதிததாக ரெயில்பாலம் கட்டப்படஉள்ளது.புதிய ரெயில் பாலம் பணிகள் முடியும்வரை தற்போதுள்ள ரெயில் பாலத்தில் வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து நடைபெறும்.தூக்குப்பாலம் ஆபத்தான நிலையில் உள்ளதால் யாரும் உள்ளே செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story