கட்டையால் தாக்கி கூலி தொழிலாளி கொலை; பக்கத்து வீட்டை சேர்ந்தவர் போலீசில் சரண்


கட்டையால் தாக்கி கூலி தொழிலாளி கொலை; பக்கத்து வீட்டை சேர்ந்தவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:46 AM IST (Updated: 14 Dec 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கட்டையால் தாக்கி கூலி தொழிலாளியை கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் சரண் அடைந்தார்.

மதுரை,

மதுரை அனுப்பானடி பொன்னுப்பிள்ளை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாசுமணி (வயது 49). இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நல்லமுத்து (52). கூலி தொழிலாளிகளான இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வீடு முன்பு பாசுமணி தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது பாசுமணி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில் பாசுமணியை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக நல்லமுத்து அவனியாபுரம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லமுத்துவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட நல்லமுத்து மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு வேண்டிய பல்வேறு உதவிகளை இறந்து போன பாசுமணி தான் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story