சேலத்தில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது


சேலத்தில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2018 10:00 PM GMT (Updated: 14 Dec 2018 5:38 PM GMT)

சேலத்தில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வேட்டை நடத்தி மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி, கலர்காடு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த கலர்காட்டை சேர்ந்த தனம் (வயது 60), கோவில்மேட்டை சேர்ந்த பெருமாள் (50) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் கோரிமேடு பஸ் நிறுத்தம் அருகே சோதனை நடத்தினார். அப்போதுஅங்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சின்னகொண்டலாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (36), அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதேஸ் (42), மீனாட்சி நகரை சேர்ந்த பாப்பா (45) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் எஸ்.கொல்லப்பட்டி முனியப்பன் கோவில் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த கம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கமணி (55) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த சோதனையில் 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story