மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில் சோக முடிவு + "||" + Near Sathankulam The teenager suicide The sad decision of the childless longing

சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில் சோக முடிவு

சாத்தான்குளம் அருகே
இளம்பெண் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் சோக முடிவு
சாத்தான்குளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம், 

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் பொன் பாண்டி (வயது 33). இவர் கோவையில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமலட்சுமி தன்னுடைய கணவரிடம் விவாகரத்து பெற்று, மகனுடன் தனியாக பிரிந்து சென்று விட்டார்.

பின்னர் பொன்பாண்டி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா (வயது 26) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் உஷா மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த உஷாவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக உஷா கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை
மகனை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. குடும்ப பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை
கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரரையும், அவரது மனைவியையும் போலீசார் தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
4. சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
5. திருக்கோவிலூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தாய் திட்டியதால் விபரீத முடிவு
திருக்கோவிலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.