நாகை, கீழ்வேளூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி
நாகை, கீழ்வேளூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
நாகப்பட்டினம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல், கல்விதகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் நீடித்தது. நேற்று காலை நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் செல்வம் தலைமையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல கீழ்வேளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக சங்கத்தினர் 5-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பாரதிசெல்வம், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் கீழ்வேளூர் கிராம நிர்வாக அலுவலர் குமரசாமி நன்றி கூறினார்.
இதில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story