இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகத்துடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்


இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகத்துடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:15 AM IST (Updated: 15 Dec 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்துடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருவாரூர்,

திருவாரூர் மத்திய பல் கலைக்கழகம் மற்றும் தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.பி.தாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஒப்பந்தம் புதிய படிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை அறிமுகப்படுத்த வழிவகுக்கும். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமானது மற்ற கல்வி நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட 3-வது ஒப்பந்தமாகும்.

அறிவார்ந்த ஆராய்ச்சியின் தற்போதைய கட்டத்தில், நாம் பல்வகை ஆய்வுகளை ஊக்குவிக்கிறோம். ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்துவதற்கும், இடைக்கால ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கான வழிகளை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என கூறினார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி, தேர்வுக்குழு கட்டுப்பாட்டு அலுவலர் ரகுபதி, நிதி அலுவலர் பழனி, பேராசிரியர்கள் செங்கதிர், நாகராஜன், இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர்அனந்தராம கிருஷ்ணன் உள்பட கலந்து கொண்டனர்.



Next Story