வழக்குகளின் விவரங்களை அறிந்து கொள்ள திருவாரூர் கோர்ட்டில், தொடுதிரை கணினி வசதி - மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்
திருவாரூர் கோர்ட்டில், வழக்குகளின் விவரங்களை அறிந்து கொள்ள தொடுதிரை கணினி வசதியை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
திருவாரூர்,
திருவாரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வரும் வழக்குகளின் விவரங்களை வழக்கில் தொடர்புடையவர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக தொடுதிரை கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடுதிரை கணினி வசதி திறப்பு விழா நடந்தது.
விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி கலந்து கொண்டு இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.
விழாவில் மகிளா நீதிபதி பக்கிரிசாமி, தலைமை குற்றவியல் நீதிபதி ராஜேந்திரன், திருவாரூர் வக்கீல் சங்க தலைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் இந்த தொடுதிரை கணினி வசதி விரைவில் செய்து தரப்பட உள்ளது.

Related Tags :
Next Story