விபத்தில் பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.11½ லட்சம் இழப்பீடு - தஞ்சை கோர்ட்டு உத்தரவு
விபத்தில் பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.11½ லட்சம் இழப்பீடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை ஈஸ்வரிநகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் ஜார்ஜ் (வயது 47). இவர் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.
கடந்த 5.5.2016 அன்று எந்திரம் பழுதான சரக்கு வாகனத்தில் ஜார்ஜ் அமர்ந்திருந்தார். இந்த பழுதான சரக்கு வாகனத்தை இணைத்து இழுத்துக்கொண்டு டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. எரவாஞ்சேரி கீரங்குடி சாலையில் டிராக்டர் வேகமாக சென்றது. அப்போது அதில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த ஜார்ஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவர் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வழியிலேயே ஜார்ஜ் இறந்தார். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இழப்பீடு கோரி ஜார்ஜ் மனைவி சுமதி தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், விபத்தில் பலியான ஜார்ஜ் குடும்பத்துக்கு ரூ.11 லட்சத்து 66 ஆயிரத்து 836 வழங்குமாறு, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன தஞ்சை மண்டல மேலாளருக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story