மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.151½ கோடி நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் தகவல்


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.151½ கோடி நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:36 PM GMT (Updated: 14 Dec 2018 10:36 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 389 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.151½ கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பில் 190 மாற்றுத்தினாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. மேலும் 301 பேருக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் செலவில் திருமண உதவித்தொகை, 3,851 மாணவ–மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 39 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, 6,131 பேருக்கு ரூ.144 கோடியே 2 லட்சம் மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகை, 2,611 பேருக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டது.

அதேபோல் 598 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் செயற்கை கை, கால் உபகரணங்கள், 620 பேருக்கு ரூ.27 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 36 பேருக்கு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் பார்வையற்றோர்க்கான உபகரணங்கள், 951 பேருக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காது கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்ட 110 பேருக்கு ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி, 549 பேருக்கு ரூ.27 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி, 744 பேருக்கு ரூ.48 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள், 886 பேருக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 800 மதிப்பில் ஊன்று கோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

755 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுகஙகு ரூ.8 லட்சத்து 30 ஆரத்து 500 மதிப்பில் பிரெய்லி கடிகாரம், 995 பேருக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 280 மதிப்பில் கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சி, 476 பேருக்கு ரூ.19 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நடைக்கருவிகள், 303 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வங்கிகடன் மானியம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இதுவரை 53 ஆயிரத்து 699 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், 38 ஆயிரத்து 553 பேருக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 389 மாற்றுத்தினாளிகளுக்கு ரூ.151 கோடியே 72 லட்சத்து 74 ஆயிரத்து 180 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story