மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை + "||" + In dindigul: Eye surgery for chicken

திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை

திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை
திண்டுக்கல்லில், கோழியின் கண்ணில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் சீலப்பாடி முத்தையா நகரை சேர்ந்தவர் அசோக். அவருடைய மகள் கோகுல சாந்த பிரியா (வயது 16). 10-ம் வகுப்பு மாணவி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி குஞ்சு வாங்கி வந்தார். அதனை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். பள்ளிக்கு செல்லும் முன்பும், மாலை வீட்டுக்கு வந்தபிறகும் அதற்கு உணவு அளித்து கவனமாக பராமரித்து வந்தார்.


இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அந்த கோழி தடுமாறி நடந்து வந்ததுடன் சோர்வாகவும் காணப்பட்டது. அதனை பிடித்து பார்த்தபோது, அதன் இடது புற கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. மேலும், கண்ணின் அடி பகுதியில் ஒரு கட்டி ஒன்றும் உருவாகி இருந்தது. இதனை பார்த்த கோகுல சாந்த பிரியா சோகமாக காணப்பட்டார்.

மேலும், கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்து வந்தார். மகளின் சோகத்தை அறிந்த அவருடைய தந்தை, கோழியை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக கூறினார். அதன்படி, திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கோழியை அசோக் கொண்டு சென்றார்.

அதனை பரிசோதித்த டாக்டர், கண்ணில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று காலை கோழிக்கு ‘அனஸ்தீசியா’ என்ற மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதில் கோழி மயங்கியவுடன் அறுவை சிகிச்சை தொடங்கியது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த அறுவை சிகிச்சையில் கண் அருகே உள்ள கட்டி வெட்டி அகற்றப்பட்டது.

பின்னர், அந்த இடத்தில் தையல் போட்டு மருந்து வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த கோழி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனை பார்த்த கோகுல சாந்த பிரியா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் காயம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாறு டாக்டர் அறிவுறுத்தினார். இதற்காக, கோழியின் கழுத்தில் வட்ட வடிவ தாள் பொருத்தப்பட்டது.

‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோழி, ஆடு போன்றவற்றை கொன்று சாப்பிடும் மனிதர்களிடையே, தான் வளர்த்து வந்த கோழிக்கு ஏற்பட்ட கட்டியை நினைத்து மாணவி 2 நாட்கள் சரிவர சாப்பிட முடியாமல் தவித்துள்ளார். அவருடைய மனிதாபிமானத்தை அறிந்து சுற்று வட்டார பகுதியினர் பாராட்டினர்.



தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதம்
திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே உள்ள நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. திண்டுக்கல்லில் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு - சுகாதார பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு
திண்டுக்கல்லில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டார்.
4. திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை
திண்டுக்கல் அருகே, பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. திண்டுக்கல்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.