அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கணினி பயிற்சி மையத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கணினி பயிற்சி மையத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்.
சிவகங்கை,
சிவகங்கை 48 காலனியில் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கணினி பயிற்சி மையம் மற்றும் நூலக திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட முதன்மை நீதிபதி மு.ஏ.செந்தூர்பாண்டியன் தலைமையில் தாங்கினார். குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் என்.பிரபாகரன் வரவேற்றார்.
விழாவில் மாவட்ட நீதிபதி கணினி பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் து.ராதிகா நூலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக் குழு தலைவர் ராமநாதன், உறுப்பினர்கள் சரளா, ஜீவானந்தம், ரசீந்திரக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ், இல்ல பணியாளர்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story