“திருமாவளவன் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்” எச்.ராஜா பேட்டி


“திருமாவளவன் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்” எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 5:18 AM IST (Updated: 15 Dec 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

ரபேல் விமான விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இது ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு பதிலடியாக அமைந்து இருக்கிறது.

கடந்த 4½ ஆண்டுகளில் ஊழல் இல்லாமல் சிறந்த முறையில் ஆட்சி செய்த பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். 5 மாநில மக்களிடம் பா.ஜ.க. ஊழல் செய்ததாக பொய் பிரசாரம் செய்து காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன.

தமிழகத்தில் ஆணவ கொலைகளுக்கு திராவிட இயக்கங்கள் மற்றும் திருமாவளவன் ஆகியோர்தான் காரணம். திருமாவளவன் என் மீது வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story