இந்திப்பட இயக்குனர் துல்சி ராம்சே மரணம்


இந்திப்பட இயக்குனர் துல்சி ராம்சே மரணம்
x
தினத்தந்தி 15 Dec 2018 5:22 AM IST (Updated: 15 Dec 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

மும்பையை சேர்ந்த இந்திப்பட இயக்குனர் துல்சி ராம்சே. இவருக்கு நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

மும்பை,

துல்சி ராம்சே உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அதிகாலை 2.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

இவர் ‘வீரானா, புரானா ஹவேலி’, ‘பந்த் டவாசா’, ‘ஓட்டல்’, ‘புரானா மந்திர்’ உள்ளிட்ட பல இந்திப்படங்களையும், பல டி.வி. தொடர்களையும் இயக்கி உள்ளார்.

Next Story