900 ஆண்டுகள் பழமையான தங்கக் காசுகள் கண்டுபிடிப்பு


900 ஆண்டுகள் பழமையான தங்கக் காசுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2018 10:15 AM GMT (Updated: 15 Dec 2018 10:15 AM GMT)

இஸ்ரேல் நாட்டில் 900 ஆண்டுகள் பழமையான தங்கக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய இஸ்ரேல் அமைந்துள்ள பகுதியில் இருந்த பழமையான துறைமுகம் அருகே 900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்கக்காசுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு கிணறு அருகே கற்களுக்கு நடுவே இருந்த வெண்கலப் பானையில் ஒரு காதணி உடன் இந்த தங்கக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் யாரோ ஒருவரால் இவை புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதை அவர் திரும்ப எடுக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இதைப் புதைத்து வைத்தவர், 1101-ம் ஆண்டு இந்தப் பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Next Story