ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்


ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:00 PM IST (Updated: 15 Dec 2018 4:00 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு ரூ.155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.

உலகில் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவே பல கோடிப் பேர் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த 7 வயதே ஆகும் ரியான், கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறான்.

அச்சிறுவன், பொம்மைகளை மதிப்பீடு செய்யும் தனது வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்வதன் மூலமே இவ்வளவு வருவாயை ஈட்டி வருகிறான்.

ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பு ரியான் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவான்.

இதனையடுத்து பெற்றோர் உதவியுடன் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ‘ரியான் டாய்ஸ் ரிவ்யூ’ என்ற யூ-டியூப் சேனலை தொடங்கினான்.

ஆரம்பத்தில், ரியானின் வீடியோ பிரபலமாகவில்லை. ஆனாலும் ரியானும் அவனது பெற்றோரும் விடாமுயற்சியாக தினந்தோறும் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்தனர். அந்த வீடியோக்களை பார்ப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது, ரியானும் பிரபலமாகத் தொடங்கினான்.

2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவேற்றம் செய்யப்பட்ட ரியானின் ‘ஜெயண்ட் எக் சர்ப்ரைஸ்’ என்ற வீடியோ, இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவை இதுவரை 80 கோடிப் பேர் பார்த்துள்ளனர். ரியா னின் சேனலை இதுவரை ஒரு கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘சப்ஸ்கிரைப்’ செய்துள்ளனர்.

இதன்மூலம் 2017-2018-ம் ஆண்டில் வரிக்கு முந்தைய வருமானமாக 155 கோடி ரூபாயை ஈட்டியுள்ள ரியான், யூ-டியூப்பில் அதிகம் சம்பாதிப் போருக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Next Story