66 வயதில் ‘மாடல்’ ஆகி அசத்தும் பாட்டி


66 வயதில் ‘மாடல்’ ஆகி அசத்தும் பாட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 4:03 PM IST (Updated: 15 Dec 2018 4:03 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் நாட்டில் 66 வயதுப் பாட்டி ஒருவர் மாடலாகி அசத்தி வருகிறார்.

லாரிசா மிகால்ட்சோவா என்ற அந்தப் பாட்டி, கலிநோவ்கா என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவர் சுமார் 40 ஆண்டுகளாக இசைக் கருவியை குழந்தைகள் இசைக்கப் பயிற்சி அளிக்கும் இசை ஆசிரியராக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மாடல் ஆவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடத் தொடங்கினார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘நாடகம் ஒன்றை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்ததை தொடர்ந்து இவை அனைத்தும் தொடங்கின. அவர்கள் என்னை சர்வதேச பெண்கள் தினத்துக்கான பதிப்புக்காக ஒரு புகைப்படப் பிடிப்பில் பங்கேற்க அழைத்தனர். நான் அதுகுறித்து யோசித்தேன். பின்னர் கவனமாக எனது ஆடைகளைத் தேர்ந்தெடுத்தேன். மேலும் எனது அக்கார்டியன் இசைக்கருவியுடன் என்னை படம் பிடிக்க வேண்டும் என்று கூறினேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

புகைப்படப் பிடிப்புக்குப் பிறகு லாரிசா தனது பேரனை விளம்பரத் தயாரிப்பாளராக இருக்க கோரியுள்ளார். ரஷியாவில் முதியவர்களுக்காக இருக்கும் ஒரே விளம்பர ஏஜன்சியை லாரிசா தொடர்புகொண்டார். அதுதொடர்பாக அவர் மாஸ்கோவுக்குச் சென்றார்.

‘‘ஆரம்பத்தில் மாடலாகும் முயற்சி எனக்கு தவறாகப் பட்டது. மாஸ்கோ ஏஜன்சிக்கு நல்ல சிகை அலங்காரத்துடன் ஹை ஹீல்ஸ் அணிந்து சென்றேன். எனது தோற்றம் அவர்களைக் கவர்ந்துவிட்டது’’ என்கிறார் லாரிசா.

அங்கு நடந்த புகைப்படப் பிடிப்புக்குப் பின் லாரிசா ஜெர்மனில் நடைபெற்ற பேஷன் ஷோவுக்கு அழைக்கப்பட்டார்.

‘‘ஒப்பனை, சிகை அலங்காரம் எனக்குப் பழக்கமில்லை. ஆனால் மாதம் ஒரு முறை நான் இதைப் பொறுத்துக் கொள்ளுவேன். நடனம் மற்றும் ‘கேட் வாக்’கை வகுப்புகளுக்குச் சென்று பழகிக் கொள்கிறேன். அனைவரின் கவனமும் என் மீது விழும் போது நான் ராணியைப் போல் உணர்கிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது’’ என்கிறார், ‘மூத்த’ மாடல் லாரிசா.

Next Story