மாமல்லபுரத்தில் காவல் நிலையத்தில் போலீஸ்காரருக்கு கத்திக்குத்து; ஏட்டு கைது இருவரும் பணியிடை நீக்கம்
மாமல்லபுரம் ரோந்து காவல் நிலையத்தில் போலீஸ்காரை கத்தியால் குத்தியதாக போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் ரோந்து காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் மறைமலையான்(வயது 45). அதே காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பூபாலன்(35). இருவரும் இ.சி.ஆர். பகுதியில் ரோந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் சுங்கச்சாவடி அருகில் இ.சி.ஆர்.ரோந்து வாகனத்தில் பூபாலன் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஏட்டு மறைமலையான் உன்னுடைய பணிநேரம் முடிந்துவிட்டது என்னிடம் ரோந்து வாகனத்தை கொடு என்று கேட்டுள்ளார்.
அதற்கு பூபாலன் இன்னும் என்னுடைய பணிநேரம் முடியாததால் ரோந்து வாகனத்தை ஒப்படைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பூபாலன் மறைமலையானை தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனே ஆவேசமடைந்த மறைமலையான் எனக்கு கீழ் சாதாரண பணிபுரியும் நீ என்னையே தாக்குகிறாயா? எனக் கூறி ரோந்து காவல் நிலையத்தில் இருந்த கத்தியை எடுத்து வந்து பூபாலனை குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் முகம், உடல் பகுதி முழுவதும் காயமடைந்து அவர் கீே-ழு மயங்கி விழுந்தார். பூபாலனை அங்கிருந்த சக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று திருப்போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து பூபாலனை தாக்கியதாக மறைமலையானை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மறைமலையான், பூபாலன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டார்.
காவல் நிலையத்தில் 2 போலீசார் மோதிக்கொண்ட சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story