வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2018 4:00 AM IST (Updated: 16 Dec 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள கோவிலை சுற்றி இருக்கும் இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக குழைந்தைகள் வந்து செல்லும் அங்கன்வாடி மைய கட்டிட பகுதியில் தேங்கி உள்ள குப்பை கழிவுகளால் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், பெண்கள் சுகாதார கழிப்பிட வளாகம் மற்றும் தன்னிறைவு திட்டத்திற்கான பூங்கா ஆகியவை உள்ளன. காற்றில் பறந்து வரும் பிளாஸ்டிக் குப்பை பைகளால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே உடனடியாக அப்பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story