பினராயிவிஜயன் சென்னை வருகையை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம்


பினராயிவிஜயன் சென்னை வருகையை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2018 4:15 AM IST (Updated: 16 Dec 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பினராயிவிஜயன் சென்னை வருகையை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் இந்து மக்கள்கட்சி சார்பில் நடந்தது.

கும்பகோணம்,

கேரளா முதல்-மந்திரி பினராயிவிஜயன் சென்னை வருகையை கண்டித்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதையும், சபரிமலையில் சரண கோஷம் போடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையும் வாபஸ் பெற வேண்டும், உடனடியாக சபரிமலையில் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story