கார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Dec 2018 3:45 AM IST (Updated: 16 Dec 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் கார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பைபாஸ் ரோடு அருகே கார் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் ஜெயச்சந்திரன்(வயது42). சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ சில மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று விட்டனர்.

மறுநாள் காலை கடைக்கு வந்த ஜெயச்சந்திரன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்து பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஜெயச்சந்திரன் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story