மாவட்டத்தில் 2 ஆயிரத்து 887 பேர் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 887 பேர் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினர்.
திண்டுக்கல்,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி ஆனவர்கள் ஆவர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதனால் மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்த தேர்வு நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 2 ஆயிரத்து 986 மாணவ-மாணவிகளுக்கு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட்டு இருந்தது. இதில் நேற்று 2 ஆயிரத்து 887 பேர் தேர்வு எழுதினர். 99 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங் களில் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story