விருத்தாசலத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 17 பேர் கைது


விருத்தாசலத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 17 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2018 10:56 PM GMT (Updated: 15 Dec 2018 10:56 PM GMT)

விருத்தாசலத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் எழில்குமார், ரவிகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கார்குடல் மணிமுக்தாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த 17 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர்(வயது 36), பாலமுருகன்(38), தாமோதரன்(47), கஜேந்திரன்(38), கோவிந்தராசு(46), சவுந்தரராஜன்(24), செல்வகுமார்(36), கலியமூர்த்தி(60), சங்கரலிங்கம்(34), சுப்பிரமணி(40), முருகன்(43), செல்வம்(54), ராமலிங்கம்(48), கோ.பொன்னேரியைச் சேர்ந்த மணிகண்டன்(43), சிவா(25), ராஜேந்திரன்(31), ராமகிருஷ்ணன்(34) ஆகியோர் என்பதும், அவர்கள் மணிமுக்தாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தியது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 17 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களது 17 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது.

இதையறிந்த கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சக மாட்டு தொழிலாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் அங்கிருந்தவர்களிடம் பேசி, கூட்டத்தை கலைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story