கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான விவகாரம்: விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு குமாரசாமி உத்தரவு


கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான விவகாரம்: விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு குமாரசாமி உத்தரவு
x
தினத்தந்தி 15 Dec 2018 11:47 PM GMT (Updated: 15 Dec 2018 11:47 PM GMT)

கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு, முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோவிலில் நேற்று முன்தினம் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியானார்கள். மேலும் 104 பேர் மைசூருவில் உள்ள கே.ஆர்.ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-மந்திரி குமாரசாமி பார்வையிட்டதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படியும், அவர்களது சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பதாகவும், அதனால் 13 பேர் பலியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரசாதம் சாப்பிட்டு 13 பேர் பலியான விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தும்படியும், விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்கும்படியும் மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜுவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, 13 பேர் பலியானது குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று மாலையில் மாரம்மா கோவிலுக்கு சென்று கர்நாடக மாநில தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சரத் சந்திரா விசாரணை நடத்தினார்.


Next Story