கூட்டுறவு ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கந்தசாமி உறுதி
கூட்டுறவு ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என புதுச்சேரி மாநில கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமி உறுதி அளித்துள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் வணிகர் சங்க வளாகத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு புதுச்சேரி கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரியங்கா, திருமுருகன், கீதா ஆனந்தன், அசனா, கலெக்டர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அமைச்சர் கந்தசாமி பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவு சங்க ஊழியர்கள் நன்றாக உழைத்தால் கூட்டுறவுத்துறை லாபத்தில் இயங்கும். கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கினால் ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். முன்னாள் பிரதமர் நேரு எந்த நோக்கத்துக்காக கூட்டுறவு துறையை கொண்டு வந்தாரோ, அந்த நோக்கம் வெற்றி பெற ஊழியர்கள் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு பாடுபட்டால் கூட்டுறவு சங்க ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு விரைவில் நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story