எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2018 6:41 AM IST (Updated: 16 Dec 2018 6:41 AM IST)
t-max-icont-min-icon

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி,

காரைக்குடி பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வின் பேச்சினைக் கண்டித்தும், அதற்காக அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இளையகவுதமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நில உரிமை மீட்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழேந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் கணேசன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சேசு ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற நிலையில் அவர்கள் திடீர் பஸ் மறியலுக்கு முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.


Next Story