பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள குத்தம்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 40). இவரது மகள் சித்ரா (14). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சித்ரா சரிவர படிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த சித்ரா நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து மகேஸ்வரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரி தன்னுடைய மகளை ஏன் சரியாக படிக்கவில்லை என்று கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த சித்ரா நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து மகேஸ்வரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story