மாமல்லபுரம் அருகே மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறை பிடிப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் தொடர்ச்சியாக இரவு நேரத்தில் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவமனை கழிவுபொருட்களை கொட்டிவருவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
மாமல்லபுரம்,
இதனால் தொற்றுநோய் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்தது. அதில் மருத்துவ கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று அதை சிறை பிடித்தனர். டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் அங்கு சென்று அந்த மினி லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இந்த மருத்துவ கழிவுகள் எந்த பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story