பினராயி விஜயன் சென்னை வருகையை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்க விட்டு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பினராயிவிஜயன் சென்னை வருகையை கண்டித்து நாகையில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் நேற்று, கருப்புக்கொடியுடன் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஜோதிபிள்ளை, செயலாளர் ஜெயபிரகாஷ், நகர செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன் கலந்து கொண்டு பேசினார்.
முல்லைப்பெரியாறு அணையில் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் பினராயி விஜயன் சென்னை வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.
இதில் மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ராமலிங்கம், பாலு உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார், தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story