மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:00 AM IST (Updated: 17 Dec 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது. மத்திய, மாநில அரசுகளுடன் அல்லாது தோழமை கட்சிகளை ஆதரிப்பது. கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கட்சி வளர்ச்சிக்காக நிதி வசூல் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட ஒன்றியத்தை சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், முன்னணி கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்றார். முடிவில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story