ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தொண்டி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினரும் திருவாடானை தொகுதி செயலாளருமான குருசாமி அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமக்கள் தொகை கொண்ட நகரமாக ஆர்.எஸ்.மங்கலம் விளங்கி வருகிறது. மேலும் தாலுகா தலைநகர் அந்தஸ்தை பெற்றுள்ள இந்த பேரூராட்சியில் நாளுக்குநாள் புதிய குடியிருப்புகள் உருவாகி மக்கள் தொகை பெருகி வருகிறது.
ஆனால் இப்பேரூராட்சியில் பொது சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பேரூராட்சியில் போதிய அளவு கழிவுநீர் கால்வாய்கள் இல்லாமல் இருப்பதுதான்.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்த பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போய்விட்டன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலைகளிலும் பிரதான வீதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக வீதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பல நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மீது தனிக்கவனம் செலுத்தி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story