கூத்தாநல்லூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல் புயல் நிவாரண பொருட்கள் வழங்க கோரிக்கை


கூத்தாநல்லூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல் புயல் நிவாரண பொருட்கள் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 7:11 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே புயல் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புனவாசல், நொச்சிக்குடி, நரிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப் பட்டது.

அப்போது நொச்சிக்குடி, நரிக்குடி கிராமத்தை சேர்ந்த 130 பேருக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. இதை கண்டித்தும், அனைவருக்கும் புயல் நிவாரண பொருட்களை வழங்கக்கோரியும் கிராம மக்கள் கமலாபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அனைவருக்கும் நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர், கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.

அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருவாரூர்- மன்னார்குடி சாலையில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story