மாவட்ட செய்திகள்

சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை + "||" + Wife, two children killed Auto Driver Suicide

சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை

சென்னை துரைப்பாக்கத்தில்
மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை
சென்னை துரைப்பாக்கத்தில் குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருகே உள்ள எழில் நகரை சேர்ந்தவர் பாபு (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விமலா (27). இவர்களின் மகன் கிஷோர் (6), மகள் தியா (4).

பாபுவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 14-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக விமலா கோபித்து கொண்டு குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

4 பேர் சாவு

இதனால் பாபு 16-ந் தேதி திருக்கழுக்குன்றம் சென்று மனைவியை சமாதானம் செய்து குழந்தைகளுடன் எழில் நகருக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் பாபு வீட்டின் கதவை தட்டினர்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது பாபு தூக்கில் தொங்குவதையும், விமலா மற்றும் 2 குழந்தைகள் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

கொலை-தற்கொலை

போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று ஜன்னலில் பாபு கட்டி போட்டுள்ளார். மற்றொரு கயிற்றில் 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு, பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவியை கொன்று விவசாயி தற்கொலை முயற்சி நடத்தை சந்தேகத்தால் விபரீதம்
அரியலூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்றுவிட்டு, விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.
2. மனைவி, 2 மகள்களை கொலை செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் தற்கொலை
மனைவி, 2 மகள்களை கொலை செய்த வழக்கில், பர்னிச்சர் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
3. மகளின் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை எனது கணவரின் சொத்துகளை அபகரிக்க முயற்சி காடுவெட்டி குரு மனைவி பேட்டி
மகளின் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. எனது கணவரின் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடப்பதாக காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா தெரிவித்துள்ளார்.
4. கண்டமங்கலம் அருகே பயங்கரம்: பெட்ரோல் ஊற்றி தொழிலாளி மீது தீவைப்பு - கள்ளக்காதலனுடன் மனைவி கைது
கள்ளக்காதலை கண்டித்ததால் பெட்ரோல் ஊற்றி தொழிலாளி மீது தீவைத்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
5. மனைவியை கொலை செய்து ஆற்றில் பிணம் வீச்சு ராணுவ வீரர், பெற்றோருடன் கைது
ஆண்டிப்பட்டி அருகே மனைவியை கொலை செய்து ஆற்றில் பிணத்தை வீசி சென்ற ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.