கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆய்வு


கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 18 Dec 2018 4:00 AM IST (Updated: 18 Dec 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி நேற்று மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி நேற்று மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் அனைத்து பிரிவுகள், தனிப்பிரிவு, ஒருவிரல் கைரேகை கூடம், தொழில்நுட்ப பிரிவு மற்றும் புகைப்பட பிரிவு ஆகியவற்றில் பதிவேடுகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆயுதப்படைபோலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை ஏற்றுக்கொண்ட டி.ஐ.ஜி., போலீசாரின் கவாத்து உபகரணங்களை ஆய்வு செய்தார். மேலும் ஆயுதப்படை மைதான வளாகத்தில் போலீசாரின் ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவற்றை வரிசையாக நிறுத்தி, அவற்றின் நிலை குறித்து பார்வையிட்டார். ஆய்வின்போது கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி உள்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story