கங்கா கல்யாண் திட்டத்தில் முறைகேடு கூட்டு குழு விசாரணை கேட்டு மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு
கங்கா கல்யாண் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது குறித்து சட்டசபை கூட்டு குழு விசாரணை கேட்டு கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேல்-சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கர்நாடக மேல்-சபை நேற்று கூடியதும் அவைத்தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி கேள்வி நேரத்தை அனுமதித்தார். அப்போது பா.ஜனதா உறுப்பினர் எம்.கே.பிரானேஷ் எழுந்து, “கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பில் கங்கா கல்யாண் திட்டத்தில் விவசாயி களுக்கு இலவசமாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கொடுக்கப் படுகிறது. இதில் முறைகேடு நடந்துள்ளது” என்று கூறி ஒரு பிரச்சினையை எழுப்பினார்.
இதற்கு சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே பதிலளித்து கூறுகையில், “கங்கா கல்யாண் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை தான். இதுகுறித்து உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இதை ஏற்க மறுத்த பா.ஜனதா உறுப்பினர்கள், “இந்த முறைகேடு குறித்து சட்டசபை கூட்டு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா உறுப்பினர்கள் மேல்-சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மீண்டும் பேசிய மந்திரி பிரியங்க் கார்கே, “எங்கள் துறையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். அந்த குழு வழங்கும் அறிக்கை உங்களுக்கு திருப்தியை தராவிட்டால், சட்டசபை கூட்டு குழு அமைக்கப்படும்” என்றார்.
இதையும் ஏற்க மறுத்த எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசபூஜாரி, “கங்கா கல்யாண் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று மந்திரியே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது, அதிகாரிகளின் குழு எவ்வாறு விசாரணை நடத்தும்?. அதனால் சட்டசபை கூட்டு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார்.
அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல்-குழப்பம் நிலவியது. இருக்கைக்கு திரும்பும்படி பா.ஜனதா உறுப்பினர்களை மேல்-சபை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பா.ஜனதா உறுப்பினர்கள் மேல்-சபை தலைவர் இருக்கையை முற்றுகயைிட்டு தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபையை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

Related Tags :
Next Story