தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்கக்கோரிக்கை: சங்கு ஊதி வந்து கலெக்டரிடம் மனு
தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நூதன முறையில் சங்கு ஊதி வந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேலைவாய்ப்பு பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டா வழங்க கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் ராஜேஷ்பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் சிவகங்கை கலெக்டர் அலுவலத்தில் நூதன முறையில் சங்கு ஊதி வந்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியள்ளதாவது:- குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளாக உள்ள நிலையில் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் கல்லல் பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பட்டியல் இன பெண்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:- கல்லல் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட பட்டியல் இன குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் அப்பகுதியில் கிடைக்கக் கூடிய கூலி வேலையை செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு நிரந்தரமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இதேபோல் காளையார்கோவில் தாலுகா உசிலங்குளம் குணக்குடை கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் கிராமத்தில் 50 வீடுகள் உள்ளது. எங்கள் கிராமத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பல வருடங்களாக அவதிஅடைந்து வருகிறோம். மேலும் எங்கள் கிராமத்தின் அருகில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. அதில் இருந்து எங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story