தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:45 PM GMT (Updated: 18 Dec 2018 5:39 PM GMT)

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவரவர் சொந்த மாவட்டத்தில் பணி புரியும் வகையில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10–ந் தேதி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சான்றுகள் வழங்கும் பணி, பயிர் சேதம் கணக்கெடுப்பு பணி போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.


இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்றுகாலை தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பின்னர் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர் முருகேசன், மாவட்ட துணை தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வட்ட தலைவர்கள் பத்மநாபன், விமலா, ராஜேஸ்கண்ணா, தனசெல்வம், மகரஜோதி, ரத்னவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் நிர்வாகிகள் சிலர், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story