21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம்


21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:00 AM IST (Updated: 19 Dec 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை,

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தர வேண்டும். கூடுதல் பணிக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ப் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விளக்க கூட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட அளவில் கண்டன ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநிலப் பொதுச்செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் முக்கிய விதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு தங்களின் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் வழங்கினர்.


Next Story