கட்டிட தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிதி உதவி ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாநாட்டில் தீர்மானம்
இயற்கை மரணம் அடையும் கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னிமலை,
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 4-வது மாநாடு சென்னிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஆ.குணசேகரன், மா.நாகப்பன், பி.சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைத்தலைவர்கள் மாதேஸ்வரன், பூபதி, ரவி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஏஸ். முத்துசாமி கொடியேற்றிவைத்தார்.
மாவட்ட துணைத்தலைவர் சி.சுந்தரம் மறைந்தவர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அதன்பிறகு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ரவி மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் சு.மோகன்குமார், சென்னிமலை வட்டார சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.பொன்னுசாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் ஆ.செங்கோட்டையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைவர் சுப்பராயன் பேசினார். சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி, அரசியல்-இயக்கம்- அமைப்புநிலை வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் பெரியசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.சின்னசாமி, துணைத் தலைவர்களாக சு.மோகன்குமார், மா.நாகப்பன், கே.அர்ச்சுனன், பி.எஸ்.பூபதி, என்.பி.ரவி, ஏ.சி.பூபதி, என்.சக்திவேல், செயலாளராக சி.சுந்தரத்தையும் தேர்ந்தெடுத்தனர்.
மேலும் துணைச் செயலாளர்களையும், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்தனர். பொதுக்குழு உறுப்பினர்களாக 96 பேர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் சேலத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டுக்கு பிரதிநிதிகளாக 3 பெண்கள் உள்பட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம், விபத்து மரண இழப்பீடு, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும்.
* கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு அமைப்பாக செயல்படுத்த வேண்டும். அதில் 50 சதவீதத்துக்கு மேல் தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.
* கட்டிட, கட்டுமான மதிப்பில் 1 சதவீதமாக வசூலிக்கப்படும் நலவரியை 2 சதவீதமாக உயர்த்தி வசூலிக்க வேண்டும். கட்டுமான நலநிதியை விரயமாக்கக்கூடாது.
* கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகைகள் மிகக்குறைவாக உள்ளன. பல உதவித் தொகைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்வால் வாழ்க்கை செலவினங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து நலத்திட்ட உதவி தொகைகளையும் பின்வருமாறு உயர்த்த வேண்டும் என இம் மாநாடு அரசை வலியுறுத்துகிறது. விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.3 லட்சம், ஈமச்சடங்கிற்கு ரூ.25ஆயிரம், திருமண உதவித்தொகை ரூ.1 லட்சம், மகப்பேறு உதவித்தொகை ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்திட வேண்டும். ஆண்களுக்கு 55 வயதிலும், பெண்களுக்கு 50 வயதிலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் சங்கத்தின் சென்னிமலை ஒன்றியத் தலைவர் எஸ்.ராஜ்குமார் வரவேற்று பேசினார். முடிவில் சங்கத்தின் சென்னிமலை ஒன்றியச் செயலாளர் ரவி என்கிற யு.தியாகராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story