தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: போலீசாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: போலீசாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2018 3:00 AM IST (Updated: 19 Dec 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு, அதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் மொத்தம் 144 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டும், அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சி.பி.ஐ. விசாரணை

இது தொடர்பாக சி.பி.ஐ.அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, காயம் அடைந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர். தற்போது துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய போலீசாருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை துரிதமாக நடந்து வருகிறது.

Next Story