காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் இருந்து நிலக்கரி துண்டுகள் கரை ஒதுங்கியது பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் இருந்து ஏராளமான நிலக்கரி துண்டுகள் கடற்கரையில் ஒதுங்கியது.
திருவொற்றியூர்,
காசிமேடு திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரை பகுதிகளில், பெய்ட்டி புயல் காரணமாக கடலில் ராட்சத அலைகள் தோன்றி கடல் நீர் சாலைகளில் வந்தது. அப்போது கடலில் கிடந்த சிறிய கற்கள் மற்றும் மணலை கரையில் கொண்டு ஒதுக்கியது. அதே போன்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் இருந்து ஏராளமான நிலக்கரி துண்டுகள் கடற்கரையில் ஒதுங்கியது. அவற்றை மீனவர்கள் போட்டி போட்டு சிறிய வகை வலையை வைத்து அள்ளி சென்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் நிலக்கரிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் போது கடலில் விழுந்த நிலக்கரி கடலில் ராட்சத அலைகள் தோன்றும் போது கரைக்கு கொண்டு வருவதாகவும் அவற்றை சேகரித்து வியாபாரிகளிடம் விற்பனை செய்வதாகவும் கூறினார்கள்.
Related Tags :
Next Story