ஊதிய உயர்வு வழங்கக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தபால் பட்டுவாடா பாதிக்கும் அபாயம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தபால் பட்டுவாடா பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:45 AM IST (Updated: 19 Dec 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் பட்டுவாடா பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம்,

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை 1.1.2016 முதல் முழுமையாக அமல்படுத்த வேண்டும், கிளை அஞ்சலகங்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக உயர்த்தி கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர் அந்தஸ்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கோட்டத்தில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டத்தால் கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தில் கோட்ட தலைவர் மாரி கூறும் போது, ‘10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் கிராமிய ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கோட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் தபால் பட்டுவாடா பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்‘ என்றார்.

Next Story