விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்


விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 7:31 PM GMT)

விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்லடம் அருகே விவசாயிகள் நேற்று 2–வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமநாயக்கன்பாளையம்,

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதை எதிர்த்தும், கேரளாவில் உள்ளதை போல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் காத்திருப்பு தொடர் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த போராட்டம் நேற்றும் 2–வது நாளாக தொடர்ந்து. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொண்டு பேசினார்.


Next Story