திருச்சியில் கடுமையான பனிமூட்டம் தரை இறங்க முடியாமல் 2 விமானங்கள் சென்னை திரும்பின
கடுமையான பனிமூட்டம் திருச்சியின் அடையாள சின்னமான மலைக்கோட்டையை மறைத்தது. தரை இறங்க முடியாமல் 2 விமானங்கள் சென்னைக்கு திரும்பின.
திருச்சி,
கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் பனிக்காலமாகும். அதிலும் மார்கழி மாதம் என்றாலே குளிர் மற்றும் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் ஆகாயத்தில் உள்ள ஓசோன் படலம் பூமி நிலப்பரப்பிற்கு அருகில் வருகிறது. திருச்சி மாநகரை தமிழகத்தின் ‘கந்தகபூமி’ என்று சொல்வது வழக்கம். ஏனென்றால், எவ்வளவு பெரிய மழை காலத்திலும் திருச்சியில் மட்டும் மழை குறைவாகவே இருக்கும். மேலும் கோடை காலம் என்றால் வாட்டி எடுத்து விடும் அளவுக்கு சுட்டெரிக்கும் வகையில் வெயில் கொடுமை இருக்கும்.
அதனால் திருச்சி மக்கள் கோடைகாலம் சென்று, எப்போது குளிர்காலம் வருமோ? என்ற ஆவலில் இருப்பதுண்டு. தற்போது மார்கழி மாதம் பிறந்து 3 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் பனிப்பொழிவு இருந்து வருகிறது. காலையில் எழுந்து நடைபயிற்சி செல்வோர், ‘ஸ்வட்டர்’ அணிந்து கொண்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் காலை 10 மணிவரை திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. மேலும் மெல்லிதான மூடுபனியானது வெண் மேகங்கள்போல வீடுகளிலும், தெருக்களிலும் புகுந்து சென்றன. இந்த சீதோஷ்ண நிலையானது பொதுமக்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். குறிப்பாக திருச்சியின் அடையாள சின்னமான மலைக்கோட்டை கடும் பனிமூட்டத்தால் மறைந்து காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல பனி விலகி மலைக்கோட்டை தெரிய தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் திறப்பு உற்சவம் நேற்று அதிகாலை நடந்தது. கோவிலுக்கு அதிகாலை வேளையில் எழுந்து சென்றவர்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. மேலும் பைபாஸ் சாலை உள்ளிட்ட இதர சாலைகளில் சென்ற பஸ், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களும் வேகத்தை குறைத்து முகப்பு விளக்கை எரியவிட்டபடியே ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் பனிமூட்டத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. விமான நிலையத்தில் இருந்து காலையில் புறப்பட்டு செல்லும் இலங்கை விமானம் உள்ளிட்ட சில விமானங்கள் கடும் பனிமூட்டம் காரணமாக நீண்ட நேரம் ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு 56 பயணிகளுடன் விமானம் திருச்சிக்கு புறப்பட்டு வந்தது. திருச்சியில் நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக அந்த விமானம் தரை இறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே புறப்பட்டு சென்றது.
இதே போன்று சென்னையில் இருந்து காலை 6.10 மணிக்கு 48 பயணிகளுடன் திருச்சிக்கு புறப்பட்டு வந்த மற்றொரு விமானமும் தரை இறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி சென்றன. திருச்சியில் வானிலை சீரானதும் இந்த 2 விமானங்களும் சென்னையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு வந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் மாவட்டத்தின் இதரப்பகுதியிலும் இதேபோன்ற சீதோஷ்ணம் நிலவியது. மணப்பாறை, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பச்சை பசேல் என தெரிந்த வயல்வெளிகள் எல்லாம் பனி மூட்டத்தால் வெண்மையாக காட்சி அளித்தன. காலை வேளையில் வயல்பகுதிக்கு சென்ற விவசாயிகள் இதன் காரணமாக தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்தனர். ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களுக்கு இடையே பனிமூட்டமானது சற்று நேரம் ஆனதும் மெதுவாக நகர்ந்து சென்றது மிகவும் ரம்மியமாக இருந்தது.மேலும் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு காலை வேளையில் வந்த பெரும்பாலான ரெயில்கள் கூட முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வந்தன. திருச்சி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று காலை பனிமூட்டம் இருந்து பரவசப்படுத்தியதாக அதை அனுபவித்த மக்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story