கலெக்டர் அலுவலகத்தில் 2-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் 2-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:30 AM IST (Updated: 19 Dec 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

20 அம்ச கோரிக்கைகள்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களிலும் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து ஊர்வலமாக செல்வதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் நின்று கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்ட தலைவர் முத்துசெல்வன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜசேகர், துணை செயலாளர்கள் அருணாசலம், ராம்குமார், அமைப்பு செயலாளர் ஆறுமுகம், பிரசார செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பொருளாளர் அருள் மாரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Next Story