மாவட்ட செய்திகள்

ஏரியூரில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் உள்பட 4 பேர் படுகாயம் + "||" + The collision with motorcycles Including the girl 4 people were injured

ஏரியூரில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் உள்பட 4 பேர் படுகாயம்

ஏரியூரில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் உள்பட 4 பேர் படுகாயம்
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சின்னப்பநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
ஏரியூர்,

இவர் நேற்று மாலை மொபட்டில் கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் காமராஜ்பேட்டையைச் சேர்ந்த மாயக்கண்ணன் (37) என்பவர் வந்தார். திடீரென மொபட்டும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணனும், மாயக்கண்ணனும் படுகாயம் அடைந்தனர். அப்போது மாயக்கண்ணனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பூசாரி நந்தகுமார் (43) என்பவர் மாயக்கண்ணனின் மோட்டார்சைக்கிளில் மோதினார். இதில் நந்தகுமார் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற கலா (30) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

அடுத்தடுத்து மோட்டார்சைக்கிள்கள், மொபட் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணன் ஏரியூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாயக்கண்ணன், நந்தகுமார் ஆகியோர் ஏரியூரில் சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளி ஊழியர்கள் 2 பேர் பலி
மதுரவாயல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பள்ளிக்கூட ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. கேரளாவில் கடுமையான வெயில்: பெண் உள்பட 2 பேர் பலி
கேரளாவில் கடுமையான வெயில் காரணமாக பெண் உள்பட 2 பேர் பலியாயினர்.
3. மோட்டார் சைக்கிள்கள் மோதல், தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர்.
5. பட்டிவீரன்பட்டி அருகே பயங்கரம், மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 3 தொழிலாளர்கள் பலி
பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பலியாகினர்.