நெல்லையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:30 AM IST (Updated: 19 Dec 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் நேற்று தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த போராட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது. கமலேஷ் சந்திரா பரிந்துரையை கடந்த 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை தொகை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். குழு காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.துணை செயலாளர் அமீர் தலைமை தாங்கினார். துணை செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ஞான பாலசிங் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பொருளாளர் நம்பி, நிர்வாகிகள் கணபதி, சின்னத்தம்பி, கற்பகராஜ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடரும்

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், “கடந்த மே மாதம் நடைபெற்ற தொடர் போராட்டத்தால் கமலேஷ் சந்திரா பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. ஆனால் பரிந்துரையின் முழுமையான முடிவுகளை அமல்படுத்தாமல் ஏமாற்றி விட்டனர். எனவே விடுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்“ என்றனர்.

Next Story